ADDED : ஆக 02, 2026 04:16 AM

புதுடில்லி: 'கா ங்கிரசை மத்தியில் மீண்டும் ஆட்சியில் அமர வைக்க, சரியான தலைவர் ராகுல் அல்ல பிரியங்கா' என்ற பேச்சு, மீண்டும் காங்., தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே எழ ஆரம்பித்து விட்டது. இதற்கு காரணம், சமீபத்தில் பிரதமர் வீட்டு முன், 'நீட்' தொடர்பாக நடந்த போராட்டம்.
பாதுகாப்பு நிறைந்த பிரதமர் வீட்டு முன், திடீரென காங்., தலைவர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் தான் அது. இதில், திடீரென சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார் எம்.பி., பிரியங்கா. இது, டில்லி போலீசை அதிர வைத்து விட்டது. பின், அவரை கைது செய்து வண்டியில் ஏற்ற முடியாமல் திண்டாடியது போலீஸ்.
ஒரு பக்கம், பெண் போலீசார் பிரியங்காவை பஸ்சுக்குள் இழுக்க, அடுத்த பக்கம், காங்., பெண் தொண்டர்கள் வெளியே இழுக்க, பிரியங்காவின் ஒரு கால் தரையிலும், இன்னொரு கால் பேருந்திலும் இருந்ததால், வண்டியை எடுக்க முடியாமல் டிரைவர் மிகவும் திண்டாடினார். ஒரு வழியாக, அவரை கைது செய்து வண்டியில் அழைத்து சென்றனர். பின், விடுவிக்கப்பட்டார்.
இந்த போராட்டத் தால், பிரியங்காவின் மவுசு கூடிவிட்டது. 'எதையும் தைரியமாக கையாளுகிறார்; எது குறித்தும் கவலைப்படுவதில்லை. பார்லி.,யிலும் ராகுலை விட நன்றாக செயல்படுகிறார்; பேசுகிறார். பா.ஜ.,வை எதிர்கொள்ள சரியானவர், காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம், பிரியங்கா தான்' என, தொண்டர்களி டையே பேச்சு அடிபடுகிறது.
ஆனால், சோனியாவோ, ராகுலை முன்னிறுத்த ஆசைப்பட்டு, அதையே செய்து வருகிறார். ராகுல் இருக்கும் வரை, பா.ஜ., எது குறித்தும் கவலைப்பட தேவையில்லை.
