/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி எம்.எல்.ஏ., பெங்களூர் பயணம்
/
புதுச்சேரி எம்.எல்.ஏ., பெங்களூர் பயணம்
ADDED : ஏப் 23, 2024 05:46 AM
புதுச்சேரி, : பெங்களூர் தெற்கு பகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்ற கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் லோக்சபா தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. பெங்களூர் தெற்கு பகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில், பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, பிரசாரம் செய்ய, புதுச்சேரி, பா.ஜ.,காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் நேற்று பெங்களூர் சென்றார்.
அவருக்கு, கர்நாடக மாநிலம் சிக்பேட் தொகுதியின் பா.ஜ. எம்.எல்.ஏ., உதய கருடாச்சார் உட்பட பா.ஜ., நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

