/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 46.67 லட்சம் நுாதன மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
/
ரூ. 46.67 லட்சம் நுாதன மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ரூ. 46.67 லட்சம் நுாதன மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ரூ. 46.67 லட்சம் நுாதன மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 15, 2024 11:32 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு வகையில் நுாதனமாக முறையில் 46.67 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பிரியங்கா. இவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர், 27 லட்சம் ரூபாயை அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் மர்ம நபரிடம் ஏமாந்துள்ளார்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி 4.95 லட்சம் ரூபாயும், கோனேரிக்குப்பத்தை சேர்ந்த ரவி சர்மா என்பவர் 1.30 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பி ஏமாந்துள்ளனர்.
காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிதுபூஷன் தாஸ், 14 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, குருமாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதித்ராஜ், இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியதால்,அவர் 1.32 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.
நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ராகுல் ராமகிருஷ்ணனிடம் மர்ம நபர், பம்பர் பரிசு விழுந்துள்ளதாக, அந்த பரிசை பெற முன்பணம் அனுப்பி வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர் 47 ஆயிரம் ரூபாயை அனுப்பினார். பின் கூடுதல் சலுகை பெறலாம் எனக் கூறி அவரது வங்கி விபரங்களை பெற்று , அவரது கணக்கில் இருந்து 58 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
மேலும், ராகுல் ராமகிருஷ்ணனிடம், ட்ரிப் குறித்து, மற்றோரு மர்ம நபர் நேரில் வந்து அவரிடம் பேசி 2 லட்சம் ரூபாயை அவரிடமிருந்து வாங்கி சென்றார். அதன் பின் அந்த மர்ம நபரை தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, 5 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.