/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் திரிந்த 2 பேர்; தேர்தல் நடைமுறை சட்டத்தில் கைது
/
கத்தியுடன் திரிந்த 2 பேர்; தேர்தல் நடைமுறை சட்டத்தில் கைது
கத்தியுடன் திரிந்த 2 பேர்; தேர்தல் நடைமுறை சட்டத்தில் கைது
கத்தியுடன் திரிந்த 2 பேர்; தேர்தல் நடைமுறை சட்டத்தில் கைது
ADDED : மார் 22, 2024 05:58 AM
மரக்காணம் : கத்தி வைத்திருந்த இருவர், தேர்தல் நடைமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ரவுண்டான அருகே நின்றிருந்த இருவர் போலீசாரை கண்டதும் ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், இருவரும் கத்தி வைத்திருந்து கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ராயர் மகன் ஜவகர்,24; சின்னகோட்டகுப்பம் சேகர் மகன் செங்குட்டுவன்,25; என்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், தேர்தல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.