UPDATED : ஆக 04, 2026 08:59 PM
ADDED : ஆக 04, 2026 08:52 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு ஸ்கூட்டர்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரும்பார்த்தபுரம், புதுத் தெருவை சேர்ந்தவர் நேதாஜி,19; அதேப் பகுதியில் உள்ள மொபைல் போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது தாய்க்கு சொந்தமான யமாகா ஸ்கூட்டரை (பி.ஒ.05 வி.சி. 1511) எடுத்து சென்று வேலை செய்யும் கடை எதிரே நிறுத்திருந்தார்.
வேலையை முடித்து விட்டு பார்க்கும் ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
அதே போல், புதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்தவர் கவிதா, 49. இவரது டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டரை (பி.ஒ.02, எக்ஸ் 2826) கடந்த 26ம் தேதி வீட்டு முன் நிறுத்திருந்தார். மறுநாள் பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்கூட்டரை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
