/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
21 அடி விநாயகர் சிலை; போலீசார் பாதுகாப்பு
/
21 அடி விநாயகர் சிலை; போலீசார் பாதுகாப்பு
ADDED : செப் 06, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாப்படுகிறது. அதையொட்டி, புதுசேரி விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தாண்டு, பேரவை சார்பில், 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், சாரம் அவ்வை திடலில், 21 அடி விநாயகர் சிலை செய்து கொண்டுவரப்பட்டு அங்கு அமைக்கப்பட்டது. நாளை விநாயகருக்கு சிறப்பு பூஜை, செய்து விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நேற்று இரவு முதல், விநாயகர் சிலைக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.