UPDATED : மே 25, 2026 10:54 PM
ADDED : மே 25, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கென்டியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 29; என்பவர் மது போதையில் வில்லியனுார்- மங்கலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக் கொண்டு இருந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதோபோல் வில்லியனுார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
