தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக்கில் கஞ்சா கடத்தி வந்த ரவுடிகள் உட்பட 3 பேர் கைது

பைக்கில் கஞ்சா கடத்தி வந்த ரவுடிகள் உட்பட 3 பேர் கைது

பைக்கில் கஞ்சா கடத்தி வந்த ரவுடிகள் உட்பட 3 பேர் கைது


ADDED : ஆக 02, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிமேடு பல் மருத்துவமனை அருகே பைக்கில் கஞ்சா கடத்தி வந்த ரவுடிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, கோரிமேடு அரசு பல் மருத்துவமனை அருகே தன்வந்திரி நகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் (பி.ஒய். 05 எஸ் 4416) அதிவேகமாக வந்த நபர்கள், போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை விரட்டி பிடித்து போலீசார், பைக்கை சோதனை செய்தபோது, 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், திலாஸ்பேட்டை, வீமன் நகர், கருணாஜோதி வீதியை சேர்ந்த ரவுடிகளான தியாகராஜன் மகன் தீபக், 18; ரமேஷ் மகன் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார், 21; அரியாங்குப்பம், சின்ன வீராம்பாட்டினம் ரோட்டைச் சேர்ந்த முத்து மகன் கண்ணா (எ) மோகனபிரசாத், 18, என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக், 3 மொபைல்கள், ரூ. 22 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து,  அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு  சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்ட ரவுடிகளான தீபக், ரஞ்சித்குமார் ஆகியோர் மீது தலா 2 கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us