ADDED : ஆக 02, 2026 06:42 PM
புதுச்சேரி: தாகூர் நகர், தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான 2 நாள் கூடைப்பந்து போட்டிகள் நடந்தது.
போட்டியினை பள்ளியின் தாளாளர் கில்பர்ட் ஜெயராஜ், முதல்வர் தேவ அன்பு தலைமை தாங்கினர். முன்னாள் மாணவர் நித்தின் மோகன் போட்டியை துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் புதுச்சேரியின் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 15 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற 20 அணிகள் கலந்து கொண்டன.
ஆண்கள் பிரிவில் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், தி ஸ்டடி பள்ளி 2ம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் பிரிவில் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், குளூனி சி.பி.எஸ்.இ., பள்ளி 2ம் இடத்தையும் பெற்றன.
போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், போக்குவரத்து எஸ்.பி., ரட்சனா சிங் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஆனந்த்பாபு வாழ்த்தி பேசினார்.
பள்ளி நிர்வாகிகள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
