/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோஷம் கழிப்பதாக கூறி ரூ.2.18 லட்சம் மோசடி கிளி ஜோதிடர் உட்பட 3 பேர் கைது

ADDED : ஆக 05, 2024 04:23 AM
காரைக்கால்: காரைக்காலில் மகனுக்கு திருமண தோஷம் கழிப்பதாக கூறி ரூ.2.18லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நெடுங்காடு நல்லத்துார் பகுதியை சேர்ந்த சகுந்தலா இவர் தனது மகனுக்கு திருமணம் தோஷம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா மகனுக்கு திருமண தோஷம் கழிப்பதாக கூறி கிளி ஜோதிடர் விருதுநகரை சேர்ந்த முனுசாமி, 35; என்பவர் சகுந்தலா விடம் தனக்குத் தெரிந்த நபர் ஒருவர் உள்ளதாக கூறி துாத்துக்குடியை சேர்ந்த சுகந்தி, 32; மற்றும் தென்காசி சேர்ந்த வினோத் ராஜ், 30;ஆகிய இருவரையும் அறிமுகம் செய்துள்ளார்.
பின்னர் இருவரும் சகுந்தலா மகனுக்கு திருமணம் தோஷம் நீங்க பரிகாரமாக சிறப்பு பூஜை செய்யவேண்டும் என்று தவனை முறையில் ரூ.2.18லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றி வந்துள்ளனர். இதை அறிந்த சகுந்தலா பலமுறை கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.
இது குறித்து சகுந்தலா புகாரின் பேரில் நெடுங்காடு சப். இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப் பதிந்து, கிளி ஜோதிடர் முனுசாமி, சுகந்தி, வினோத்ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.