/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேதபுரீஸ்வரர் கோவிலில் 38வது மகோற்சவ விழா
/
வேதபுரீஸ்வரர் கோவிலில் 38வது மகோற்சவ விழா
ADDED : மே 16, 2024 11:00 PM

புதுச்சேரி: புதுச்சேரி, காந்தி வீதியில் பழமைவாய்ந்த, வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 38வது ஆண்டு மகோற்சவ விழா, கடந்த 14ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை, சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிேஷகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை, உற்சவதாரர் வக்கீல் மருதுபாண்டியன், கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் மற்றும் ஆலய சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
மகோற்சவ விழாவில் தினமும் காலையில் சந்திரசேகரர் வெள்ளிப் பல்லக்கில் வீதியுலா மற்றும் சுவாமிக்கு அபிேஷகமும், மாலையில் வீதியுலாவும் நடக்கிறது. நாளை காலை 10:00 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

