தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 5 பேரிடம் ரூ. 90 ஆயிரம் மோசடி

5 பேரிடம் ரூ. 90 ஆயிரம் மோசடி

5 பேரிடம் ரூ. 90 ஆயிரம் மோசடி


ADDED : ஜூலை 04, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ. 90 ஆயிரம் இழந்துள்ளனர்.

அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண், பேஸ்புக்கில் மத்திய அரசுடன் தொடர்புடையதாக கூறப்படும் முதலீடு திட்டம் குறித்த விளம்பரத்தை பார்த்து கிளிக் செய்துள்ளார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், முதலீடு தொடர்பான மொபைல் செயலி அனுப்பியுள்ளார். அதை உண்மை என நம்பிய அப்பெண் ரூ. 20 ஆயிரத்து 829 முதலீடு செய்து ஏமாந்தார். 

பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர், வங்கி கணக்கில் இருந்து அவரது அனுமதியின்றி, மர்மநபர்கள் மோசடியாக ரூ. 40 ஆயிரம் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.

இதேபோல், டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் 17 ஆயிரத்து 790, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் 7 ஆயிரத்து 500, வில்லியனுாரை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 150 என, மொத்தம் 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 90 ஆயிரத்து 269  இழந்துள்ளனர். 

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us