ADDED : ஜூலை 11, 2026 08:01 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 95 ஆயிரம் இழந்துள்ளனர்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசி, வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் மூலம் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. அந்த சலுகையை பெற தங்களது விவரங்களை தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அதை நம்பிய அவர் தனது வங்கி அனைத்து விவரங்கள் மற்றும் ஓ.டி.பி.,யை தெரிவித்துள்ளார். அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 40 ஆயிரத்து 996 எடுத்து விட்டனர்.
இதேபோல், முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் 35 ஆயிரத்து 999, கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 200, வாணரப்பேட்டையை சேர்ந்தவர் 3 ஆயிரம், முதலியார்பேட்டையை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 767, கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 500 ரூபாய் என, 6 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 95 ஆயிரத்து 462 ரூபாயை இழந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
