தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 6 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி

6 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி

6 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி


ADDED : ஜூன் 19, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 4 லட்சம் இழந்துள்ளனர்.  

ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவரை, மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு, குறைந்த வட்டியில் ரூ. 4 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.

இதைநம்பி, கடன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, மர்மநபருக்கு ரூ. 2 லட்சத்து 57 ஆயிரத்து 600 செலுத்தியபின், மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. 

இதேபோல், வம்பாகீரப்பாளையத்தை சேர்தவர் 50 ஆயிரம், மூலக்குளத்தை சேர்ந்தவர் 2 ஆயிரத்து 800, கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் 87 ஆயிரத்து 700, தருமபுரியை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 800, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் 3 ஆயிரம் என, 6 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 900 இழந்துள்ளனர்.

இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us