/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கம்பத்தில் கார் மோதி விபத்து
/
மின் கம்பத்தில் கார் மோதி விபத்து
ADDED : மே 27, 2024 05:15 AM
பாகூர்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் புல்கெட் 29; ரிஷிநாத் 26; தீபக் 25; யாஷ் 25, இவர்கள் சென்னையில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் நான்கு பேரும் சென்னையை சேர்ந்த தனது நண்பர் யாஷ் 26; என்பரை அழைத்து கொண்டு நேற்று டி.என். 18 பிடி 4413 என்ற பதிவெண் கொண்ட காரில் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். பின் மாலை சென்னைக்கு புறப்பட்டனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே கார் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஏட்டு செல்வவிநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

