ADDED : ஜூலை 31, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ரெஸ்ட்ரோ பாரில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி ஒயிட் டவுன் அருகே உள்ள லபோர்தினிஸ் வீதியில் இயங்கி வரும் தனியார் ரெஸ்ட்ரோ பாரில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
விசாரணையில் மின் மீட்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.