/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம்
ADDED : ஏப் 06, 2024 05:32 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தலையொட்டி, இந்திரா நகர் பா.ஜ., நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் கோரிமேடு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
மாநில துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார்.
பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி சிறப்புரையாற்றினார்.
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பேசுகையில், 'நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கான திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகிறது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என, மக்கள் நினைக்கின்றனர். அதிக இடங்களில் பா.ஜ., வெற்றிப் பெற்று ஆட்சி பிடிக்கும்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள எனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளித்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும்' என்றார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் இந்திரா நகர் தொகுதியில் தாமரை சின்னத்திற்கு அதிக ஒட்டு பெற வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

