/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டையில் மின்மாற்றி தீப்பிடித்து வெடித்ததால் பரபரப்பு
/
முதலியார்பேட்டையில் மின்மாற்றி தீப்பிடித்து வெடித்ததால் பரபரப்பு
முதலியார்பேட்டையில் மின்மாற்றி தீப்பிடித்து வெடித்ததால் பரபரப்பு
முதலியார்பேட்டையில் மின்மாற்றி தீப்பிடித்து வெடித்ததால் பரபரப்பு
ADDED : மே 28, 2024 04:08 AM

அரியாங்குப்பம், முதலியார்பேட்டையில் மின்மாற்றி வெடித்து தீப்பிடித்ததால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று இரவு 8:20 மணிக்கு திடீரென மின்மாற்றி வெடித்து தீபிடித்து எரிந்தது.
மின்மாற்றி அருகில் கடை வைத்திருந்தவர்கள், அந்த வழியாக சென்றவர்கள் என பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மின்மாற்றியில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் கடலுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் தீபிடித்து எரிந்த மின்மாற்றியை மின்துறை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அதனால், அந்த பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதே போல், லாஸ்பேட்டை அடுத்த புதுப்பேட்டை, தென்றல் அப்பார்ட்மெண்ட் அருகில் இருந்த மின் கம்பம் ஒயர் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மின்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து அதனை சரி செய்தனர்.