/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதந்திர போராட்ட வீரருக்கு கவிதாஞ்சலி
/
சுதந்திர போராட்ட வீரருக்கு கவிதாஞ்சலி
ADDED : செப் 17, 2024 04:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பாக இந்திய விடுதலைக்காக போராடிய, புதுச்சேரி தியாகி செண்பகராமண் பிறந்தநாள் புகழஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
சட்டசபை எதிரில் வ.உ.சி., சிலை அருகில் செண்பகராமன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கவிதாஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஆய்வாளர் கலைவரதன், செண்பகராமனின் விடுதலைப் போராட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.
செண்பகராமன் உறவினர் ரமேஷ்பாபுசங்கர், இயக்கத்தின் செயலாளர் கலைவாணி கணேசன் செண்பகராமன் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
துணைச் செயலாளர் வெற்றிவேல், துணைத் தலைவர் கதிரேசன், லலிதா, வெங்கட்ராஜ், செல்வ குமரன், மலர் துாவி வீரப் புகழ் வணக்கம் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தனர்.
இயக்கத்தின் பொறுப்பாளர்கள் இளங்குயில், சரஸ்வதி வைத்தியநாதன், கவிஞர்கள் மதன், சத்தியமூர்த்தி, பத்மநாபன், நித்யஸ்ரீ, சத்தியா, பச்சையம்மாள், காஞ்சனா, சுதர்சனம், ரத்தின விநாயகம், குமாரவேலு, பிரமிளாமேரி, கலியபெருமாள், விசாலாட்சி கலந்து கொண்டனர்.

