நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கடைக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் ஆனந்தம்மாள் சத்திரம் வீதியைச் சேர்ந்தவர் கோட்டைசாமி, இவரது மகள் கோபிகா 18, இவர் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.
உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் பாலசரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.