நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் அடுத்த அரசூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் இவரது மகள் கிரித்திகா ஜெயஸ்ரி 22, இவர் ராஜிவ்காந்தி மகளிர் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு வருடம் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வாங்க கடந்த 27 ம் தேதி வீட்டில் இருந்து காலை 10.00 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பாத்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.