ADDED : மார் 28, 2024 04:30 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கைது செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரியில் ஆம்.ஆத்மி, கட்சியினர் போராட்டங்கள் நடத்தி கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுத்தம் சுந்தர்ராஜன் என்பவர் நேற்று இரவு ராஜா தியேட்டர் சந்திப்பில் வாயில் துணியுடன் நின்று, கையில் தராசு ஏந்தி, பொய் வழக்கை கண்டித்து அமைதியான முறையில் கண்டனத்தை தெரிவித்தார்.
