தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதிதிராவிடர் நலத்துறை தினக்கூலி ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறை தினக்கூலி ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறை தினக்கூலி ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 07, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதிதிராவிடர் நற்பணி இயக்கம், அரசு ஊழியர் சம்மேளனம், ஆதிதிராவிடர் நலத்துறை தினக்கூலி ஊழியர்கள் சங்கம் ஆகியன சார்பில், சட்டசபையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் வீரசெல்வம் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறையில் கடந்த 19 ஆண்டுகளாக தினக்கூலி சமையல் உதவியாளராக பணிபுரியும் 46 ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இந்த துறையில் பணியாற்றி இறந்த 18 பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்குதல், 10 ஆண்கள் பணி முடித்த தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை சட்டசபை கூட்ட தொடரில் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. தினக்கூலி ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us