/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதித்யா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
ஆதித்யா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2024 01:21 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 9ம் ஆண்டாக சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
மாணவி தனிஷா 500க்கு 490 மதிப்பெண்ணுடன் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி பிரியதர்ஷினி 488 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவர்கள் நேத்ரா, ஹரித்தாசிவா, கர்வ் ஆகியோர் தலா 484 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
நீதர்ஷணா தாவரவியல் பாடத்திலும், ராஜசிம்ம பெருமாள் கணினி அறிவியல் பாடத்திலும், நேத்ரா, பாலகுமரன் ஆகியோர் வேதியியல் பாடத்திலும், பிரியதர்ஷிணி, ஹரிஸ்ரீதர், ஈஸ்வரநாத் ஆகியோர் கணிதத்திலும், ஷர்மிளா, கிரிபா, தான்யாஸ்ரீ, ஜெனனி, ஹர்ஷவர்தினி, சரண்யா, தினேஷ்கார்த்திக், ஜெசிகா ஜெனா ஆகியோர் உடற்கல்வி பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
மேலும், 480க்கும் மேல் 11 மாணவர்களும், 475க்கு மேல் 19 பேரும், 450க்கு மேல் 89 பேரும், 400க்கு மேல் 265 பேரும், 75 சதவீதத்திற்கு மேல் 386 பேரும், 60 சதவீதத்திற்கு மேல் 74 சதவீதத்திற்குள் 369 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக ஆங்கிலத்தில் 273 பேரும், கணிதத்தில் 57 பேரும், இயற்பியலில் 53 பேரும், வேதியியலில் 138 பேரும், உயிரியலில் 110 பேரும், கணினி அறிவியலில் 53 பேரும், உடற்கல்வியலில் 83 பேரும், வணிகவியலில் 31 பேரும், கணக்கியலில் 18 பேரும், பொருளாதாரத்தில் 5 பேரும், தகவல் நடைமுறையியலில் 24 பேரும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்.
அவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பாராட்டினர். பள்ளி முதல்வர், இயக்குனர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

