தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நீட் தேர்வில் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை 

நீட் தேர்வில் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை 

நீட் தேர்வில் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை 


ADDED : ஜூலை 21, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ரமணீஷ்வர் நீட் தேர்வில் 646 மதிப்பெண்களுடன், அகில இந்திய அளவில் 1756வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 

2026ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளில் நாடு முழுதும் 11.21 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதிய 4716 பேரில் 2451 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

அதில், ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ரமணீஷ்வர் 646 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் 1756வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  தொடர்ந்து, மாணவ, மாணவிகள் இன்பஸ்ரீ–633( 3073), பிரணவ்–631(3397), விஷ்வகண்ணன்–630 (3467), பிரீதம்–630(3464), ரோஷினி(எ) ரூபாவதி– 616(5790), விஷ்வக்ேஷனன்–602(9371) மற்றும் கைலாஷ் விஷ்வநாதன்–600 (10161) இடங்களை பெற்றுள்ளனர். 

600க்கு மேல் 8 பேரும், 550 முதல் 599 வரை 15 பேரும், 500 முதல் 545 வரை 10 பேரும், 475 முதல் 499 வரை 10 பேரும், 450 முதல் 474 வரை 16 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதாபூனமல்லி, பள்ளி முதல்வர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர். 

அகில இந்திய அளவில் நடக்கும் மருத்துவம், பொறியியல், வர்த்தகம், பட்டய கணக்காளர் ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆதித்யா கல்வி குழுமத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us