தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு புரிந்துணர்வு ஒப்பந்தம்

மணக்குள விநாயகர் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு புரிந்துணர்வு ஒப்பந்தம்

மணக்குள விநாயகர் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : ஜூலை 21, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் ‘துல்லியமான ஊட்டச்சத்து- ஆரோக்கியமாக வாழ என்ன உணவு உண்ண வேண்டும்’ தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி பங்கேற்றனர். 

கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோயம்புத்துார், ஊட்டச்சத்து மரபியல் நிறுவனத்தின் நிறுவனர் ஜனனி தமிழ்வாணன், ஒவ்வொரு மனிதரின் உடலமைப்பு, மரபணு அமைப்பு, வாழ்க்கை முறை, உணவுமுறை, துல்லியமான ஊட்டச்சத்து. சமச்சீர் உணவுப் பழக்கம் உள்ளிட்ட உணவு பழக்கத்தால் உடல்நலத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு குறித்தும் விளக்கமளித்தார்.

இதில், கல்லுாரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை– கோயம்புத்துார், மரபியல் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம், பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், தொழில்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்படும்.  

ஏற்பாடுகளை உணவு மற்றும் ஊட்டச்சத்து துறைத்தலைவர் கவிதா மற்றும் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us