தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி மறுப்பு புதுச்சேரி அரசுக்கு தி.மு.க., கண்டனம் 

துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி மறுப்பு புதுச்சேரி அரசுக்கு தி.மு.க., கண்டனம் 

துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி மறுப்பு புதுச்சேரி அரசுக்கு தி.மு.க., கண்டனம் 


ADDED : ஜூலை 21, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: துப்புரவுப் பணியில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி வழங்க மறுக்கும், புதுச்சேரி அரசுக்கு தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை; புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 1,500க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

உள்ளாட்சித் துறை மூலம் வெளியிடப்பட்ட அரசாணையில், குறைந்தபட்ச கூலி  12,726 ரூபாய்,  சம்பளத்துடன் வார விடுமுறை, தேசிய விடுமுறையில் இரட்டிப்பு சம்பளம், பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தம், சம்பள ரசீது உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதில் எதுவும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வயதை காரணம் காட்டி, துப்புரவுப் பணியில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களுக்கு, குறைந்த பட்ச கூலி வழங்க மறுப்பதை தி.மு.க., கண்டிக்கிறது. எனவே, புதுச்சேரி மாநிலத்தை துாய்மை பகுதியாக மாற்றி வரும் ஏழை துப்பரவுத் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி உள்ளிட்ட உறுதிமொழிகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us