/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏழை மக்களுக்கு இன்வெர்ட்டர் திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
/
ஏழை மக்களுக்கு இன்வெர்ட்டர் திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ஏழை மக்களுக்கு இன்வெர்ட்டர் திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ஏழை மக்களுக்கு இன்வெர்ட்டர் திட்டம் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ADDED : மார் 10, 2025 06:27 AM
புதுச்சேரி: மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
அவர், முதல்வர் ரங்கசாமியை, சந்தித்து கொடுத்த மனு;
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய திட்டங்களை நிதி நிலைக்கு ஏற்ப அறிவித்து, முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
கோடையில் மின்வெட்டாலும், மழைக்காலங்களில் இயற்கை சீற்றத்தாலும் மக்கள் பாதிக்கின்றனர்.
ஏழை மக்களுக்கு வீட்டிற்கு ஒரு இன்வெர்ட்டர் அரசு சார்பில் வழங்க வேண்டும். இத்திட்டத்திற்கு, முதல்வரின் தாய் பெயரை வைக்க வேண்டும். மீனவ கூட்டுறவு சங்கத்தில் பதிந்துள்ள அனைவருக்கும் மீன்பிடி தடைக்கால நிதியுதவி வழங்க வேண்டும்.
துப்புரவு பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
கடந்த காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு மாதம் 18,000 சம்பளத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவித்தீர். அவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இன்வெட்டர் திட்டத்திற்கு தனது தாயின் பெயரை வைப்பதற்கு மறுத்த முதல்வர், நான் அதற்காக வரவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே வந்திருக்கின்றேன்' என்றார்.
மாநில பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், மாணவரணி செயலாளர் பிரதீப் ஆகியோர் உடனிருந்தனர்.