எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய செயல்பாடு பாதிப்பு: சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு குற்றச்சாட்டு
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய செயல்பாடு பாதிப்பு: சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 20, 2026 07:16 PM
ADDED : ஜூன் 20, 2026 07:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் திட்டங்கள் முடங்கியுள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி அம்பேத்கர் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டு அமைப்பு தலைவர் புருஷோத்தமன், பொதுச்செயலாளர் முருகவேல் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
புதுச்சேரி அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் திட்ட இயக்குனராக அருண்விநாயகன் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டப்பணிகள் முறையாக செயல்படுத்தாமல் முடக்கப்பட்டு குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளன. அங்கு பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிறுவனத்தில் திட்ட பணிகள் மற்றும் சேவைகள் தடையின்றி செயல்படுத்த உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரியில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் சமூக நல அமைப்புகள், பெண்கள் நல அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து ஜனநாயக ரீதியான போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
