/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டவுன் பிளானிங் ஆன்லைனில் அனுமதி
/
டவுன் பிளானிங் ஆன்லைனில் அனுமதி
ADDED : ஆக 03, 2024 04:33 AM
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழல் துறை
கிராமப்புறங்களில் காற்றின் தரத்தை மதிப்பிட 3 காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளார் கோவில் நகரத்தில் ரூ. 17.26 கோடி மதிப்பீட்டில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் உதவியுடன் அறிவியல் மையம், மின்னணு கோளரங்கம், புத்தாக்க மையம் அமைக்கப்படும்.
கடல் அரிப்பு தடுக்க கடற்கரை மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மேம்பாட்டிற்கு ரூ.130 கோடியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரூ. 50 கோடியில் தேங்காய்திட்டு சுற்றுலா மேம்பாடு, உள்ளூர்வாசிகள் வாழ்வாதாரத்திற்கு உதவவும், ரூ. 175 கோடியில் கப்பல் பயணம் முனையம் அமைக்க உலக வங்கியில் கடன் கேட்கப்படும்.
நகர மற்றும் கிராம திட்டமிடல்
சாதாரண, சிறப்பு, தொழிற்சாலை மற்றும் பல அடுக்கு மாடி உள்ளிட்ட அனைத்து விதமான கட்டடங்களுக்கான அனுமதி ஆன்லைன் மூலம் வழங்க, புதுச்சேரி கட்டட விதிகள் மற்றும் மண்டல ஒழுங்குமுறை விதிகள் திருத்தப்பட்டு நடப்ப ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும். பூமியான்பேட் ஜவகர் நகர் குடியிருப்பில் ரூ. 1.63 கோடியில் கழிப்பிடம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தாண்டு 2,500 வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.