/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
/
பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
ADDED : மே 09, 2024 04:31 AM
வில்லியனுார் : வில்லியனுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வளவனுார் அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சேவியர்குமார்,35; இவர் குருமாம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து தனது பைக்கில் வேலைக்கு புறப்பட்டார். செல்லிப்பட்டு கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த கார் சேவியர்குமார் பைக் மீது நேருக்கு நேர் மோதியதில் சேவியர்குமார் துாக்கியெறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிகிடந்தார். அருகில் இருந்தவர்கள் சேவியர் குமாரை மீட்டு கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சேவியர்குமாரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து வில்லியனுார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் விசாரணை செய்தனர். காரை லாஸ்பேட்டையை சேர்ந்த பேராசிரியர் காந்திமோகன் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார், காந்திமோகன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.