/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு

ADDED : செப் 15, 2024 07:13 AM

புதுச்சேரி: இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட 400 மீட்டர் சிந்தடிக் ஓடுதளம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மைதானம் நடுவே புல்வெளி கொண்ட கால்பந்து மைதானம் அமைக்கவும், மைதானத்தில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கம்பு வைத்து உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை ஓட்டம் போன்றவற்றில் வீரர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யவும், பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஹாக்கி மைதானம் கேட்பாரற்று கிடக்கிறது. அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை விடுத்தும் அரசும், அரசு அதிகாரிகளும் சுணக்கம் காட்டி வருகின்றனர். இப்பணிகளை கவர்னர், முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் மாறன் உடனிருந்தனர்.