/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி
/
போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி
ADDED : ஜூன் 27, 2024 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர் சார்பில், போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை சார்பில், போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழி ஏற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், நலத்துறை இயக்குனர் இளங்கோவன், முதுநிலை கணக்கு அதிகாரி ஸ்ரீதரன், கண்காணிப்பாளர்கள், பழனி, கதிரவன் உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.