தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு 

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு 

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு 


ADDED : ஜூன் 10, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குனர் வீர வெங்கடேஸ்வரி செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, ஓராண்டு கால முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு இந்தாண்டு நடத்த அனுமதி பெற்றுள்ளது.

இந்த வகுப்பானது இரு பருவங்களை கொண்டதாகும். வகுப்பில் சேர்வதற்கு வரும் 1ம் தேதி குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தியடைந்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில், கூட்டுறவு மேலாண்மை, நிதி மேலாண்மை, நிர்வாகம், வங்கியல், கணக்கியல், தணிக்கை, கடன் மற்றும் கடன் சார்பற்ற சங்கங்கள், கூட்டுறவு மற்றும் இதர சட்டங்கள், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் திட்ட அறிக்கை தயார் செய்தல், ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ், கணினி மேலாண்மை சான்றிதழ், நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் என்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பயிற்சி முடிக்கும் மாணவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டுறவுத் துறை, கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் பணியில் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், நகைக் கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணியில் சேருவதற்கும் இந்த பட்டயச் சான்றிதழ் பயனுள்ளதாக இருக்கும்.

பயிற்சியில் சேர்வதற்கு, www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜூலை 20ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்தி விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் 20,750 ரூபாய் பதிவேற்றம் செய்த கட்டண ரசீது நகல் மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதில் சுய ஒப்பமிட்டு, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், 62, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0413–2331408, 2220105 ஆகியே தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us