/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச கணினி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
இலவச கணினி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 31, 2024 02:24 AM
புதுச்சேரி: ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய இலவச கணினி மென்பொருள், வன்பொருள் பராமரிப்பு பயிற்சி திட்டத்திற்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது, மத்திய அரசின் தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சகத்தினால் புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற என்.சி.வி.டி., சான்றிதழுடன் கூடிய கணினி மென்பொருள் மற்றும் கணினி வன்பொருள் பராமரிப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.
பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பட்ட படிப்பை முடித்த மாணவர்களுக்கு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இம்மையத்தில் வழங்கப்படுகின்றது.
வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். இதர பயிற்சிக்கு வயது 18ல் இருந்து 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை, இலவச பாட புத்தகம், போட்டித் தேர்வு பயிற்சி புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்படும். பயிற்சிகள் அனுபவம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட உள்ளது.
பயிற்சில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 10ம் தேதி வரை பெறப்படும்.
மேலும் விபரங்களுக்கு ரெட்டியார்பாளையம் கனராவங்கி, இரண்டாம் தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தினை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04132200115 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.