/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இயற்கை மருத்துவம், யோகா படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு
/
இயற்கை மருத்துவம், யோகா படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு
இயற்கை மருத்துவம், யோகா படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு
இயற்கை மருத்துவம், யோகா படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 01, 2024 06:32 AM
புதுச்சேரி : இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்பில் சேர, புதுச்சேரி மாணவர்களுக்கு, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பிற்கு செங்கல்பட்டு அரசு யோகா இயற்கை மருத்துவ கல்லுாரி மற்றும் சர்வதேச யோகா இயற்கை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் சேர புதுச்சேரி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை ,www.tnhealth.org என்ற, இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகலை, சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் வரும் 8ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல, மற்றொரு சுய சான்றொப்பம் இட்ட நகலை, புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள, 'சென்டாக்' அலுவலகத்தில் வரும் 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு முன், சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநில வாரியம் அல்லது அதற்கு இணையான, வேறு ஏதேனும் வாரியத்தால் நடத்தப்படும் உயர்நிலை சான்றிதழ் தேர்வின், தகுதித்தேர்வின் அனைத்து பாடங்களிலும் தனித்தனியாக, ஆங்கிலத்துடன் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்ற பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.