/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடு
/
விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடு
ADDED : செப் 09, 2024 05:16 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கோவில்கள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபட்ட, பெரிய விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கான பணிகள் விறு விறுப்படைந்துள்ளன.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை, கடற்கரையில் கரைத்து வருகின்றனர்.
கோவில்கள் மற்றும் பொது இடங்களில் வைத்து, 5 முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வழிபாடு செய்தனர். அந்த சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று, புதுச்சேரி கடற்கரையில் கரைக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், கடற்கரையில், சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக, பொக்லைன் இயந்திரம் மூலமாக சமன்படுத்தும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு சென்று, கடற்கரையில் கரைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.