/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் துாக்கிட்டு தற்கொலை
/
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் துாக்கிட்டு தற்கொலை
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் துாக்கிட்டு தற்கொலை
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் துாக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 16, 2024 11:50 PM

புதுச்சேரி : புதுச்சேரியில், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் கைதான நபர், காலாப்பட்டு மத்திய சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, மார்ச் 2ம் தேதி மாயமானார். மூன்று நாட்கள் கழித்து, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில், துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த காக்கா என்ற கருணாஸ், 19, அரிகிருஷ்ணன் என்ற விவேகானந்தன், 57, கைது செய்யப்பட்டனர். சிறுமி பலாத்காரம் மற்றும் படுகொலை, புதுச்சேரியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும், கோர்ட்டு க்கு அழைத்து வந்தால், பொதுமக்கள் தாக்கக் கூடும் என்பதால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.
இந்நிலையில், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வளாகத்தில் தனி அறையில், கைதிகள் விவேகானந்தன், கருணாஸ் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தனர். விவேகானந்தன், தனி அறையின் கழிப்பறை பகுதிக்கு மேல் உள்ள கதவு கம்பியில், நேற்று அதிகாலை 5:15 மணிக்கு, தன் துண்டால் துாக்கு போட்டு இறந்தார்.
சத்தம் கேட்டு கருணாஸ் கூச்சலிடவே, வார்டன்கள் ஓடி வந்து விவேகானந்தனை இறக்கி அருகில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
ஆனால், அவர் இறந்து விட்டது உறுதியானது.
மார்ச் 5ல் கைது செய்யப்பட்ட விவேகானந்தன், சிறையில் இருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அவரை கண்காணிக்க, உடன் கைது செய்யப்பட்ட கருணாசை, விவேகானந்தன் அறையில் அடைத்து வைத்திருந்தனர்.
ஆனால், கருணாஸ் துாங்கிக் கொண்டிருந்தபோது, விவேகானந்தன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் தற்கொலை குறித்து, மாஜிஸ்ரேட் விசாரணை நடக்கிறது.