/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆஷா ஊழியர்கள் சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்வு
/
ஆஷா ஊழியர்கள் சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்வு
ADDED : ஆக 03, 2024 04:33 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், ஆஷா ஊழியர்களுக்கு மாத சம்பளம், ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், முதல்வர் ரங்கசாமி சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வரும், ஆஷா ஊழியர்களுக்கு, மாத ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என, அறிவித்தார். ஆனால், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக புதுச்சேரி ஆஷா ஊழியர் சங்கத்தின் சார்பில், அனைத்து ஊழியர்களும் முதல்வர் ரங்கசாமியிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.
அவரும் இது குறித்து விரைவில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆஷா ஊழியர்களுக்கு மாத ஊதியம், ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆஷா ஊழியர்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.