/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சரமாரி தாக்குதல்
/
கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சரமாரி தாக்குதல்
ADDED : மே 03, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கிரிக்கெட் பயிற்சியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி, நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 43; கிரிக்கெட் பயிற்சியாளர். துத்திப்பட்டு, விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு நேற்று பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜாகண்ணு, வெங்கட்ராமனிடம், 'உன்னால் தான் எனக்கு பதவி கிடைக்கவில்லை' எனக் கூறி ஆபாசமாக திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, வெங்கட்ராமன் அளித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.