ADDED : மே 12, 2024 05:21 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரவிந்தர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனைபடைத்த மாணவர்களை பள்ளி சேர்மன் காசிலிங்கம், முதல்வர் அரவிந்த்குமார் பாராட்டினர்.
பள்ளி சேர்மன் காசிலிங்கம், பள்ளி முதல்வர் அரவிந்தகுமார் கூறுகையில், 'நமது பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 44 மாணவர்களில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 2 வகுப்பில் தேர்வு எழுதிய 53 மாணவர்களில் 52 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 98 சதவீதம் ஆகும்.
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் தாமிஜீதீன் 545 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம், கிஷோர் 512 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், அப்ரோஸ் பானு 493 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
10ம் வகுப்பில் மாணவர்கள் மகிழ் 465 பெற்று முதல் இடம், சத்யா 463 பெற்று இரண்டாம் இடம், தரண் 434 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
பாடவாரியாக பொருளியலில் 90, உயிரியியலில் 82, வேதியலில் 92, தமிழில் 95, வணிகவியலில் 94, இயற்பியலில் 86, கணக்கில் 98, கணினி அறிவியலில் 98, கணக்கு பதிவியலில் 87, ஆங்கிலத்தில் 88 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்' என்றார்.
முன்னதாக தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் சேர்மன் காசிலிங்கம், பள்ளி நிர்வாகி அரவிந்த்குமார் ஆகியோர் பாராட்டினர்.