/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல் ஆப் மூலம் ஆட்டோ கட்டணம் கலெக்டர் கூட்டத்தில் முடிவு
/
மொபைல் ஆப் மூலம் ஆட்டோ கட்டணம் கலெக்டர் கூட்டத்தில் முடிவு
மொபைல் ஆப் மூலம் ஆட்டோ கட்டணம் கலெக்டர் கூட்டத்தில் முடிவு
மொபைல் ஆப் மூலம் ஆட்டோ கட்டணம் கலெக்டர் கூட்டத்தில் முடிவு
ADDED : மார் 15, 2025 06:15 AM
புதுச்சேரி: கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், பிரவீன்குமார் திரிபாதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆட்டோ டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு, நல வாரியம் அமைத்தல், மொபைல் செயலி மூலம் கட்டணம் வசூலித்தல், இருசக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.
போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் கூறுகையில், 'அனுமதியில்லாமல் இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஓரிரு மாதத் தில் மொபைல் செயலி மூலம் ஆட்டோ கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.
மற்ற கோரிக்கைககள் குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என, கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார்.