/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளி கூடைபந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

ADDED : ஆக 25, 2024 11:44 PM

புதுச்சேரி: மாற்றுதிறனாளிகள் கூடைபந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி கேலக்ஸி ரோட்டரி சங்கம், புதுச்சேரி சக்கர நாற்காலி கூடைபந்துது சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைபந்து போட்டி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது.
ஆண்கள் பிரிவில் இரண்டு அணிகளும், பெண்கள் பிரிவில் இரண்டு அணிகள் என மொத்தம் நான்கு அணிகள் கலந்து கொண்டன. பெண்கள் பிரிவில் டீ-ஏ அணி 1 க்கு 0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப் பெற்றது. ஆண்கள் பிரிவில் 8 க்கு 6 என்ற புள்ளி கணக்கில் டீ-ஏ அணி வெற்றிப் பெற்றது.
வெற்றிப் பெற்ற அணிகளுக்கு விளையாட்டு துறை துணை இயக்குனர் வைத்தியநாதன், டாக்டர்கள் கார்திக், ரங்கநாதன், மாறன், புதுச்சேரி சர்க்கிள் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்க தலைவர் பாலா, செயலாளர் சிவக்குமார், கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.