/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் அன்னுசாமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
பாகூர் அன்னுசாமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாகூர் அன்னுசாமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாகூர் அன்னுசாமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 12, 2024 04:54 AM

பாகூர்: பாகூர் பேராசியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 107 மாணவர்களில் 104 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 97 சதவீதம் ஆகும். இதேபோல், பிளஸ் 2 தேர்வு எழுதிய 99 மாணவர்களில், 98 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 99 சதவீதம். 10ம் வகுப்பில், மாணவர் லோகேஷ்வரன் 492, ஸ்ரீவர்ஷினி 486, எழிலன் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
450க்கும் மேல் 14 பேர், 400க்கு மேல் 33 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பிளஸ் 2 வில், மாணவிகள் ஸ்டெபி 588, திவ்யா 575, ஹரினி 567 மதிப்பெண்கள் பெற்று சிரப்பிடம் பிடித்தனர். வணிகவியல் பாடத்தில் 3 பேர், கம்யூட்டர் அப்ளிக்கேஷன் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
அவர்களை பள்ளி தாளாளர் ராஜராஜன், தலைவர் இருதயமேரி, முதல்வர் அருட்செல்வி, சேலியமேடு பள்ளி கிளையின் தாளாளர் கண்ணன், துணை முதல்வர் அன்புச் செல்வி ஆகியோர் வாழ்த்தினர்.
பள்ளி முதல்வர் அருட்செல்வி கூறுகையில், 'ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற சுதந்திர போராட்ட தியாகி பேராசிரியர் அன்னுசாமியின் கனவை நனவாக்கி வருகிறோம். பேச்சு, கட்டுரை, இலக்கியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலைகள் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி பயிற்சியும் அளிக்கப்படுகிறது' என்றார்.