/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
/
பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜூன் 11, 2024 05:39 AM
பாகூர்: பாகூர் ஸ்ரீமூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (12ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா நாளை (12ம் தேதி) காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துத்துடன் துவங்குகிறது.
அதையொட்டி, இன்று (11ம் தேதி) மாலை 6.00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை 8.00 மணிக்கு பல்லக்கில் சந்திரசேகரர் புறப்பாடும், இரவு 7.00 மணிக்கு, யானை, மயில், ரிஷபம், நந்தி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும் 16ம் தேதி இரவு 7.00 மணிக்கு பரிவேட்டையும், 18 ம்தேதி மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 20ம் தேதி காலை 8.00 மணிக்கு நடக்கிறது.
இதில், புதுச்சேரி கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தொடர்ந்து, 21ம் தேதி இரவு 7.00 மணிக்கு தெப்ப உற்சவமும், 22ம் தேதி இரவு 7.00 மணிக்கு 63 நாயன்மார்கள் வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், செயல்அலுவலர் பாலமுருகன், கோவில் அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபுமற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.