/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடையை மீறி பேனர் போலீசார் வழக்கு பதிவு
/
தடையை மீறி பேனர் போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஜூலை 04, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி பேனர் வைத்திருந்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை உள்ளது. தடையை மீறி பேனர் வைப்போர் மீது வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலை சந்திப்பில் தடையை மீறி வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் குறித்து, சப்கலெக்டர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் பேனர் வைத்த மர்ம நபர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.