/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு ரூ. 20 தள்ளுபடி
/
காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு ரூ. 20 தள்ளுபடி
காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு ரூ. 20 தள்ளுபடி
காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு ரூ. 20 தள்ளுபடி
ADDED : ஏப் 05, 2024 05:33 AM
புதுச்சேரி: காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு, ரூ. 20 தள்ளுபடி அளித்து விற்பனை நடக்கிறது.
புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட மதுபான கடை, பார்கள் உள்ளது. இதில், வகை வகையான பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் விற்பனை செய்கின்றனர். கோடை வெயில் துவங்கியதால், பெரும்பாலன மது பிரியர்கள் பீர் வகையை விரும்பி தேர்வு செய்கின்றனர்.பீர்களுக்கு 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்க கால நிர்ணயம் உள்ளது.
பீர் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கி வரப்படும் பீர் வகைகள் சில, மதுபான கடைகளில்விற்பனை ஆகாமல் தேங்கி உள்ளது. அதனால், காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு, மதுபான கடைகள் ரூ. 20 தள்ளுபடி அளித்து விற்பனை செய்கின்றனர். ரூ. 120 மதிப்பிலான பீர்கள் ரூ. 100க்கு விற்பனை செய்கின்றனர். மதுபான பிரியர்களும் கிடைத்தவரை லாபம் என நினைத்து காலாவதி தேதியை கவனிக்காமல் வாங்கி, அருந்துகின்றனர்.

