/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சென்டம்
/
பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சென்டம்
பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சென்டம்
பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சென்டம்
ADDED : மே 12, 2024 05:11 AM

வில்லியனுார்: பகவான் ராமகிருஷ்ணா ஆங்கிலப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
வில்லியனுார் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் உள்ள பகவான் ராமகிருஷ்ணா ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 45 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி தொடர்ந்து 19வது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாணவர் வரதன் 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவர் குமரன் 487, மாணவர் விஸ்வநாத் 486, மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். மாணவி லேகாஸ்ரீ 485 மதிப்பெண் பெற்று நான்காம் இடம் பிடித்தார்.
450க்கு மேல் ஆறு பேர், 400க்கு மேல் 21 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மற்ற மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பாடவாரியாக தமிழில் 98, ஆங்கிலம் 98 மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 90க்கு மேல் தமிழில் 13 பேரும், ஆங்கிலத்தில் 16 பேரும், கணிதத்தில் 8 பேரும், அறிவியலில் 17 பேரும், சமூக அறிவியல் 15 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனைக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகி சிவசுப்ரமணி நன்றி தெரிவித்தார்.