பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை படிப்பு: திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வெளியீடு
பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை படிப்பு: திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வெளியீடு
UPDATED : ஜூலை 23, 2026 07:17 PM
ADDED : ஜூலை 23, 2026 07:13 PM
புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பி.பி.ஏ., மியூசிக், நடனம், பி.வி.ஏ., விஷூவல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட நுண்கலை படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்த, மாணவர்களின் வரைவு தரவரிசைப் பட்டியலை, www.centacpuducherry.in என்ற இணையதளத்தில், சென்டாக் வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசை பட்டியல், நுழைவுத் தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில், முறையே 60க்கு 40 என்ற விகிதத்தில், தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் விண்ணப்ப விவரங்களை, தங்களுடைய லாகின் மூலம் நுழைந்து, டேஷ்போர்டில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை குறித்த தகவல் எஸ்.எம்.எஸ்., மூலம் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் அனுப்பப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டில் உள்ள கிரிவன்ஸ் வழியாக நாளை 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.
குடியிருப்பு, ஜாதி, மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடு சம்பந்தமாக இதுவரை புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பிக்காதவர்கள், நாளை 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு சென்டாக் இணையதளம் அல்லது ஹெல்ப்லைன் எண்கள் 0413-2655570 மற்றும் 2655571 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
