நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திலிப்குமார், 22; இவர் கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 7ம் தேதி தனது பைக்கை அதே பகுதியில் உள்ள ஓட்டல் வாசல் வெளியில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது, பைக் காணா மல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

